ப்ரெண்ட்ஷிப் பற்றி பேசினால் ஓவர் சீன் போடுகிறாளே என்ற கடுப்பில் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சிவா..
ஆலிஷா – 6
அவன் கோபமாகத் தான் இருக்கின்றானா என்று பார்ப்பதற்காக சிவாவைப் பார்த்து ஆலிஷா கேட்டாள்..
“உங்க வயசு என்ன…?”
“22.. உங்களுக்கு…?”
“நீங்க கெஸ் பண்ணி சொல்லுங்க பாப்பம்..?
கிறிஷ்டினாவின் வயது 27.. ஆகையால், ஆலிஷாக்கும் 27 வயது தான் இருக்கும் என்று சிவாவுக்கு தெரியும்.. இருந்தாலும் அவளைக் கொஞ்சம் கலாய்க்கலாம் என்று முடிவு செய்தான்..
“40..?”
“அடப்பாவி.. என்ன பாத்தா அவ்வளவு வயசான மாதிரியா இருக்கு…?
“எனக்கு தெரியல.. நீங்களே சொல்லுங்க..”
“27”
“அவ்வளவு தானா..?”
“ஏன்..?”
“பாத்தா ரொம்ப வயசான மாதிரி இருக்கீங்க..?”
“ஓஹோ.. அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி அவ்ளோ அழகா இருக்கேன்னு லாம் சொன்னீங்களே.. எல்லாமே பீலவா…?”
“ஹாஹா.. ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்.. உங்களுக்கு 27 வயசுன்னு எனக்கு தெரியும்..”
“எப்புடி தெரியும்…?”
“கிறிஷ்டினாவும் நீங்களும் சேம் ஏஜ் தானே..?”
“ஹ்ம்ம்..”
“அத வச்சி தான் தெரியும்ன்னு சொன்னேன்..”
“அப்போ உங்கள விட 5 வயசு கூடுன பொண்ண தான் கிரஷ்ன்னு சொன்னீங்களா சார்…?”
“ஹாஹா.. அதெல்லாம் அப்புடித் தான்.. கிரஷ்ல என்ன வயசு வித்தியாசம் எல்லாம்..?
“ஓஹோ..”
“ஆனா, உண்மைய சொல்லணும்னா கிறிஸ்டினாவ விட நீங்க தான் அழகு..”
“போதும் சிவா.. அழகு அழகுன்னு நீங்களும் எல்லா ஆம்பளைங்களையும் மாதிரி சொல்லிட்டு இருக்காதீங்க.. அழகுல இங்க எதுவுமே இல்ல.. எல்லா பொண்ணுக்குள்ளேயும் ஒரு நல்ல மனசு இருக்கும்.. அதையும் பாருங்க.. மனசு நல்லா இருக்குற பொண்ணுங்க போகப்போக உங்க கண்ணுக்கு இன்னும் அழகா தெரிவாங்க..”
அவள் கொஞ்சம் கோபமாக சொல்ல.. அதையும் சிவா தனக்கு சாதகமாக மாற்றினான்..
“அதனால தான் சொல்றேன்.. நீங்க கிறிஸ்டினாவ விட செம்ம அழகுன்னு..”
“வாட்…?”
“உங்க வெளி அழகு போலவே உங்க மனசும் ரொம்ப அழகா இருக்கு.. நேரம் ஆக ஆக உங்க நல்ல மனசு பாத்துப் பாத்து என் கண்ணுக்கு இன்னும் இன்னும் நீங்க அழகா தெரியுறீங்க..”
கேட்டதும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள் ஆலிஷா..
“என்ன சொன்னாலும் கடைசில அங்க தான் வந்து நிக்கிறீங்க.. நோட்டி போய்..”
“நா உண்மைய தானே சொன்னேன்..?”
“சரி.. சரி.. போதும் போதும் உங்க புகழ்ச்சிப் புராணம்.. உங்க காலேஜ்ல அழகான பொண்ணுங்க யாருமே இல்லையா என்ன…?”
“இருக்காங்க.. ஏன் கேக்குறீங்க…?”
“யாரையும் லவ் பண்ணலயா…?”
“லவ் பண்ற அளவுக்கு யாருமே இல்லங்க..”
“ஏன்…? உங்க டேஸ்ட்டுக்கு யாருமே அழகா இல்லையா என்ன…?”
“அழகா இருக்காங்க.. பட், யாருமே உண்மையா இல்ல.. எங்க காலேஜ பொறுத்த வரைக்கும் பசங்க எல்லாருக்கும் நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. அதே போல பொண்ணுங்க எல்லாருக்கும் நிறைய போய் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. சிங்கிள்ன்னு சொல்லிக்க அங்க யாருமே இல்ல.. எது லவ் எது ப்ரெண்ட்ஷிப்ன்னு தெரியாம எல்லாமே சுத்திக்கிட்டு இருக்குதுங்க..”
“ஓஹோ.. அப்போ உங்க காலேஜ் ட்ரெண்ட் படி நீங்களும் நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ் வச்சிக்க வேண்டியது தானே..?”
“எனக்கு அதுலயெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல.. என்ன பொறுத்த வரைக்கும் உண்மையா ஒருத்திய லவ் பண்ணனும்.. அவளும் என்ன மட்டுமே லவ் பண்ணனும்.. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழணும்..”
“ஹ்ம்ம்.. தட்ஸ் குட்.. அவ்வளவு நல்ல பையனா நீங்க…?”
“ஹ்ம்ம்.. அப்புடி தான் நினைக்கிறேன்..”
“அப்போ கிரஷ் லிஸ்ட்ல உள்ள பொண்ணுங்க…?”
“அது கிரஷ் லிஸ்ட் தானே.. இப்போ.. நடிகர் நடிகைகள்ல நமக்கு பிடிச்ச நிறைய பேர் இருப்பாங்க.. அது போலத் தான் இதுவும்.. இன்னொன்னு.. அழகான விஷயங்கள ரசிக்கிறது தப்பில்லையே..”
“ஹ்ம்ம்.. ரசிக்கிறதோட நிறுத்திகிட்டா ஓகே தான்..”
“ஹ்ம்ம்.. ஓகே மேடம்..”
சிவா சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு மூன்றாவது பீஸினையும் சாப்பிட்டு முடித்தான்.. ஆலிஷாவும் கஷ்டப்பட்டு இரண்டு பீஸ்கள் சாப்பிட்டு முடித்தாள்.. இன்னும் மூன்று பீஸ்கள் மிச்சமாக இருக்க..
“இன்னும் மூணு பீஸ்தான் மிச்சம் இருக்கு.. இன்னக்கி நைட் உங்க ஹஸ்பண்ட் வரதுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிருங்க..” என்றான் சிவா..
“ஹ்ம்ம்.. ட்ரை பண்றேன்..” என்றவாறு கதிரையில் இருந்து எழுந்தாள்.. சாப்பிட்ட மிச்சதை உள்ளே எடுத்துச் சென்று வைத்து விட்டு சிவாவுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.. பின்னர் அவன் கொண்டு வந்த ஐஸ்கிரீம், சாக்லேட்களை எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தாள்..
“ஐயோ.. அதெல்லாம் உங்களுக்குத் தான்.. அதெல்லாம் நீங்களே சாப்பிடுங்க.. நா கிளம்புறேன்..” என்றவாறு எழுந்தான் சிவா..
“கொஞ்சமாச்சும் சாப்பிட்டு போங்க சிவா..”
“இல்லங்க.. பரவால்ல.. அதெல்லாம் நீங்களே சாப்பிடுங்க.. அந்த ஐஸ்கிரீம் செம்ம டேஸ்ட்டா இருக்கும்.. சாப்ட்டு பாருங்க..”
“ஹ்ம்ம்.. தேங்க்ஸ் சிவா..”
“ஐயோ.. இதோட எத்தன தடவ தான் தேங்க்ஸ் சொல்லிட்டீங்க…?”
“சரி.. ஓகே.. இனிமே சொல்லல.. ஹாஹா..”
“ஹ்ம்ம்.. சோ.. நா கிளம்பட்டுமா…?”
“ஹ்ம்ம்..”
“சோ.. நாம ப்ரெண்ட்ஸ் தானே..?”
என்றவாறு கையை நீட்டினான்..
கொஞ்ச நேரம் யோசித்தவள்..
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… யெஸ்..”
என்றவாறு அவனது கையைப் பிடித்து குலுக்கினாள்..
ஈரலிப்பான காற்று ஊதாத நிறைய வெற்று பலூன்களை உள்ளங்கைகளால் வருடுவது போல இருந்தது அவளது உள்ளங்கை..
“ப்ப்ப்ப்ப்ப்ப்பாஹ்…”
“என்ன..?”
“என்னங்க.. உங்க கை இவ்வளவு சாப்ட்டா இருக்கு..?”
“அதுக்கு..?” என்றபடி கையை விசுக்கென எடுத்தாள்..
“இல்ல… வீட்ல எந்த வேலையும் செய்யிறதே இல்ல போல…?”
“ஹாஹா.. ஹலோ.. இந்த வீட்ல உள்ள எல்லா வேலையுமே நான் தான் செய்வேன்..”
“வீட்டு வேல செய்யிற பொண்ணுங்க கை இப்புடி சாப்ட்டா இருக்காதே..?”
“கஷ்டமான வேர்க்ஸ் பண்ணும் போது கைக்கு க்ளோஸ் போட்டுக்குவேன்..”
“ஓஹ்.. குட்.. குட்..”
“ஹ்ம்ம்..”
“சரி.. அப்போ நா கிளம்புறேன்.. என்றவாறு சிவா கிளம்ப எத்தனிக்க..
“ஆலிஷா.. அம்மா.. ஆலிஷா..”
என்று திடீரென கேட்டின் முன் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்க.. ஆலிஷா திட்டுக்கிட்டுப் போனாள்..
“யாரு..?”
“தெரியல.. பக்கத்து வீட்டு ஆண்டின்னு நினைக்கிறேன்..” அவள் கைகள் இரண்டும் பதட்டத்தில் நடுங்கியது.. முகம் குப்பென வியர்த்தது..
“சரி.. ஓகே.. பயப்படாதீங்க.. கூல்.. காம் டவுன்..”
“பயமா இருக்கு சிவா.. நீங்க யாருன்னு கேட்டா நா என்ன சொல்றது..?”
“நீங்க ஆல்ரெடி சொன்ன மாதிரி கிறிஸ்டினா தம்பின்னு சொல்லுங்க.. லேப்டாப் ரிப்பேர் பண்ண வந்திருக்கேன்னு சொல்லுங்க..”
“பயமா இருக்கு சிவா.. அவங்க இவர்கிட்ட ஏதும் பேச்சு வாக்குல சொல்லிட்டாங்கன்னா…?”
என்றவள் கைகள் இரண்டும் பதட்டத்தில் நடுங்கின.. வேகமாக மூச்சும் வாங்கினாள்..
சட்டென அவளது கைகள் இரண்டையும் பிடித்தான் சிவா.. பிடித்து கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்து தனது கைகள் இரண்டையும் அவள் கைகள் மீது வைத்து அழுத்தி..
“இங்க பாருங்க.. எதுவும் ஆகாது… காம் டவுன்..”
சிவா சட்டென அவளது கைகளைப் பிடித்ததும் அவளது பயந்த மனநிலை அதிர்ச்சியான மனநிலையாக மாறியது.. ஒரு செக்கன் ஆடிப் போனாள் ஆலிஷா.. அவளது கை நடுக்கம் அந்த செக்கனே நின்றது.. மெல்ல அவனது கைகளின் பிடியில் இருந்து அவளது கைகளை விடுவித்துக் கொண்டாள்..
“இங்க பாருங்க.. இங்க தப்பு எதுவுமே நடக்கல.. அவங்க பாத்தாலும் சமாளிச்சுக்கலாம்.. உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொன்னாலும் கூட சமாளிச்சுக்கலாம்.. நீங்க எதுவுமே நடக்காத மாதிரி கேசுவலா போய் அவங்ககிட்ட என்னன்னு கேளுங்க.. முடிஞ்ச வரைக்கும் கேட்டோடையே வச்சி பேசி அவங்கள அனுப்பிடுங்க..”
“ஹ்ம்ம்..” என்றவாறு கண்களை மூடி பெருமூச்சு ஒன்றினை விட்டவாறு வெளியே சென்றாள் ஆலிஷா.. அந்த ஆண்ட்டி வீட்டினுள் வந்தாள் எப்படியும் பைக்கினை பார்த்து விடுவார்.. அதனால் அவன் உள்ளே ஒளிந்து எந்த பயனும் இல்லை என்பதனால் கேசுவலாக சென்று சோபாவில் அமர்ந்தான்.. போனவள் சற்று நேரத்தில் திரும்பி வந்தாள்..
“யாரு..? என்னாச்சி..?”
“அது ஒரு பாட்டி.. இந்த ரோட்ல தான் நாலாவது வீட்ல இருக்காங்க.. அவங்க போனுக்கு ரீசார்ஜ் பண்ண சொல்லி காசு தந்துட்டு போறாங்க..”
“ஓஹோ.. நீங்க மொபைல் ரீசார்ஜ் எல்லாம் பண்ணுவீங்களா…?”
“அதெல்லாம் இல்ல.. அவங்களுக்கு உதவிக்கு யாரும் இல்ல.. அதனால என்னோட ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி அவங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விடுவேன்..”
“ஹ்ம்ம்.. குட்.. குட்.. இதுக்குத் தான் அவ்வளவு பயந்தீங்களா…? ஹாஹா..”
“அத விடுங்க.. இதுதான் சாக்குன்னு என் கைய பிடிக்கிறீங்க..? நா எதிர்பாக்கவே இல்ல தெரியுமா..? உங்கள நல்லவன்னு நினச்சேன்..” கோபமாக கூறினாள்..
“கைய பிடிச்சா கெட்டவனா..?”
“அப்போ… தனியா இருக்குற ஒரு பொண்ணு கைய திடீர்னு பிடிச்சா என்ன சொல்றது சார்…?”
“அது.. நா தப்பா எதுவும் பண்ணல.. உங்களுக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் தந்தேன்.. அவ்வளவு தான்..”
“வாட்…?”
“யெஸ்.. நம்ம உடம்புல அதிரனலின் ன்னு ஒரு ஹோர்மோன் இருக்கு.. அது ஆபத்தான டைம்ல டக்குன்னு நம்ம உடம்புல சுரக்கும்.. அதனால அந்த ஆபத்துல இருந்து ஈஸியா தப்பிக்க நமக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலான பவர அது தரும்.. அது தான் உங்க உடம்பு நடுக்கத்தையும் பயத்தையும் இல்லாம பண்ணிச்சிது..”
“ஓஹ்.. அது எனக்கும் தெரியும்.. விட்டா ஒரு பத்து செக்கன்ல நானே சரி ஆகி இருப்பேன்.. ஆனா.. நீங்க என்னோட பெர்மிஸன் இல்லாம என் கைய பிடிச்சது தப்பு..”
“என்னங்க இது…? கைய தானே பிடிச்சேன்.. ஏதோ உங்கள கிஸ் பண்ண மாதிரி பேசுறீங்க…?”
“கைய புடிச்சதுக்கு நா ஷாக் ஆகி இருக்கலன்னா அப்புறம் அத தானே பண்ணி இருப்பீங்க…? பண்ணிட்டு ஷாக் டிரீட்மென்ட்ன்னு வேற சொல்லுவீங்க..”
“என்ன பேச்சு பேசுறீங்க ஆலிஷா…? நா அந்த மாதிரி ஆள் இல்ல.. உங்க நல்லதுக்காகத் தான் அப்புடி பண்ணேன்.. ஐ ஆம் சோ சாரி.. நா கிளம்புறேன்..” என்றவாறு பொய்க் கோபத்துடன் வெளியே சென்றான் சிவா.. ஆலிஷாவும் அவனைத் தடுக்கவில்லை..
பைக்கினை தள்ளிக் கொண்டு கேட் வரைக்கும் சென்று கேட்டினை திறந்து விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினான் சிவா..
ஆலிஷாவும் வெளியே சென்று யாராவது பார்க்கிறார்களா என்று கொஞ்சம் நோட்டமிட்டுவிட்டு கேட்டினை மூடிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தாள்..
அவன் அவளது கையைப் பிடித்தது நல்ல நோக்கத்தில்த் தான் என்று அவளுக்கு புரிந்தாலும், அவனை வீட்டிற்கு கூட்டி வந்ததனால் தான் இப்படியெல்லாம் நடந்தது என நினைத்தாள்.. தனது புருசனுக்குத் தெரியாமல் தான் ஏதோ பெரிய ஒரு தப்பு பண்ணியது போன்று உணர்ந்தாள்.. அதனால்த் தான் அவன் மீது அவள் கோபம் கொண்டாள்.. இனிமேல் இவ்வாறான வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.. அவனுக்கு இனிமேல் மெசேஜ் பண்ணவும் கூடாது என்று முடிவு செய்தாள்..
(தொடரும்..)
5953810cookie-checkஆலிஷா – 7no